வெட்டூர்ணிமடத்தில் எஸ்ஐ வீட்டு சுற்றுச்சுவரை உடைத்து புகுந்த டெம்போ

*டிரைவர் தப்பி ஓட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் தாறுமாறாக ஓடி வீட்டு சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே டெம்போ புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் நகருக்குள் பைக்குகள் மட்டுமின்றி டாரஸ் லாரிகள், டெம்போக்களும் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் சாலையில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து, வெட்டூர்ணிமடத்திற்கு டெம்போ ஒன்று வேகமாக வந்தது.

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ெடம்போ, அப்பகுதியில் உள்ள சென்னையில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் ஜான்சன் என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. டெம்போ மோதிய சத்தம் கேட்டதும், அப்பகுதி வாலிபர்கள் திரண்டு வந்தனர். இதனை கண்ட டிரைவர் பயத்தில் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகரிடம் தெரிவித்தனர். அவரும் இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ேபாலீசார் விசாரணையில் டெம்போ டிரைவர் சரக்கல்விளையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நஷ்டஈடு தந்து விட்டு டெம்போவை எடுத்து செல்வதாக டிரைவர் கூறியதை அடுத்து, போலீசில் புகார் அளிக்கவில்லை. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்