வேட்டவலம் அரசுப்பள்ளி மாணவிகள் குரு வட்ட தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்

கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அரசு பள்ளி மாணவிகள் குருவட்ட அளவிலான தடகளப்போட்டியில் 154 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்தம சாம்பியன் பட்டம் வென்றனர்.
கீழ்பென்னாத்தூர் குரு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வேட்டவலம் தனியார் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. அதில் சுமார் 25 பள்ளிகளில் இருந்து 450 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வஸ்மிக்கா நீளம் தாண்டுதலில் முதலிடம், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் எம்.சாருமதி 100 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகியவற்றில் முதலிடம், ரெவீலா கேத்தரின் 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், மும்முறை தத்தி தாண்டுதலில் இரண்டாம் இடமும் பிடித்தார்.

காவியா 3000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். இளவஞ்சி 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், சிந்தாமணி 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், சபிதா 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், மகாலட்சுமி குண்டு எறிதலில் முதலிடமும் பெற்றனர். சாருமதி, பிரவிலா கேத்ரின், காவியா, சுமேரா ஆகியோர் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோபிகா 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும் 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் வட்டத்தில் முதலிடமும் 400 மீட்டர் தடை தாண்டி ஒரு ஓட்டத்தில் முதலிடமும் பெற்றார். ராஜேஸ்வரி 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம். 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம். போல்வால்ட் இரண்டாம் இடமும் பெற்றார்.

சவுந்தர்யா நீளம் தாண்டுதலில் முதலிடமும், குண்டு எறிதலில் முதலிடமும், மும்முறை தத்தி தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றார். காவியா நானூறு மீட்டர் 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், பூமிகா 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், உயரம் தாண்டுதல் இரண்டாம் இடம் பெற்றார்.

கோகுல பிரியா 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். மாணவிகள் கோபிகா, சவுந்தர்யா, காவியா, பூமிகா ஆகியோர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும், கோபிகா, ராஜேஸ்வரி, கோகுல லட்சுமி, காவியா முதலிடம் பெற்றனர். வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 154 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், மூன்று மாணவிகள் தலா 15 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா, உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில், அபிராமி மற்றும் இருபால் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன், அந்தோணி குமார், அலுவலக பணியாளர்கள் மற்றும் சக மாணவிகள் பாராட்டினர். இதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவிகள் அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெறும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

Related posts

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி