வெஸ்பா ஜஸ்டின் பீபர் எடிஷன்

பியாஜியோ நிறுவனம், ஜஸ்டின் பீபர் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. கனடாவைச் சேர்ந்த பாப் பிரபலமான ஜஸ்டின் பீபருடன் இணைந்து இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க சக்கரங்கள் உட்பட முழுக்க வெள்ளை நிறத்தில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சந்தையில் வெஸ்பா ஸ்பிரிண்ட் 150 என்ற ஸ்கூட்டர் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஜஸ்டின் பீபர் எடிஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 155 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 12.5 எச்பி பவரையும், 12.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 12 அங்குல வீல்கள், முன்புறம் 200 மி.மீ டிஸ்க் பிரேக், பின்புறம் 140 மி.மீ டிரம் பிரேக், சிங்கிள் சானல் ஏபிஎஸ், டிஎப்டி டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.6,45,690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு