மிக கனமழை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!: தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மீனவர்களும் மீன்பிடிக்க இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

13, 14-ம் தேதிகளில் தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரத்தில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீன்வளத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை:

பழவேற்காடு மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கங்காதரன் உத்தரவிட்டுள்ளார். படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திட மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்