இரட்டை இலை சின்னம் விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த மனுவானது நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,’ அதிமுக கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது என் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ““புகழேந்தி என்பவர் அதிமுகவின் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை என கூறினார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது