வேங்கைவயல் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ஆஜரான 10 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சுமார் 190 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று அதன் மூலமாக 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை மேற்கொள்ளப்பட்ட 30 பேரில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது. ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 30 நபர்களில் 10 நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை காலை நடைபெற இருந்த நிலையில் தற்போது இன்று மாலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது வேங்கைவயல் வழக்கு குறித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ஆஜரான 10 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை டிச. 5ம் தேதிக்கு ஒத்திவைத்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எதற்காக பரிசோதனை? என்ன மாதிரியான பரிசோதனை? என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி