திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை உற்சவம்: இன்று தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் கிராம தேவதையான ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு ஜாத்திரை உற்சவத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 10 நாட்கள் விழா இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 2 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகமும், 5.30 மணியளவில் அம்மன் புறப்பாடும், புடவை சாற்றுதல், புஷ்ப சாத்துப்படி, பந்தல் அமைப்பு பணிகளும், கிராம வேலை ஆட்களுக்கு மரியாதை துணி வழங்கும் நிகழ்ச்சியும், முன் வாசல் முகப்பு புஷ்ப அலங்காரமும் நடந்தது. நாளை முதல் 5ம் தேதி வரை காலையில் அபிஷேகம், மலர் அலங்காரமும் 5ம் தேதி மாலை கோலம் கொண்ட அம்மன் சேவா அறக்கட்டளை சக்திகள் சார்பில் மாட வீதி வழியாக சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

7ம் தேதி இரவு 9 மணிக்கு நாடகமும், 8ம் தேதி நாத சங்கமமும், 9ம் தேதி இரவு 9 மணிக்கு பால் கும்பம் மற்றும் 11 மணிக்கு நாடகமும் நடைபெறுகிறது. 9ம் தேதி வரை, காலையில் அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெறுகிறது. கடைசி நாளான 10ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம், இரவு அம்மன் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருவிழாக்குழு, அருள்மிகு வேம்புலி அம்மன் சேவா சங்கம், மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!