வெம்பக்கோட்டை அகழாய்வில் புகைப்பிடிப்பான் கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுடுமண் உருவ பொம்மைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கருவி, சுடுமண் குழாய் ஆகியவை கிடைத்துள்ளன.

இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான காதணிகள் உள்ளிட்ட சில பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது சுடு மண்ணாலான புகைபிடிப்பான் கருவி, சுடுமண் குழாய் ஆகியவை கிடைத்துள்ளன. தொடர் ஆய்வின் மூலம் மேலும் பல அரிய பொருட்களும் தகவல்களும் தெரிய வரக்கூடும்’’ என்றார்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்