கேரளாவில் இருந்து வேலூர் வந்த அன்னாசி பழம் கிலோ ரூ20க்கு விற்பனை


வேலூர்: கேரளாவில் விளைச்சல் அமோகமாக இருப்பதால் வேலூருக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் பல்வேறு இடங்களில் அன்னாசி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அன்னாசி பழங்கள் அனுப்பப்படுகிறது. அதன்படி, வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் பழங்களை வாங்கி சென்று, சாலையோர கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் 2 லோடுகள் வந்த நிலையில் தற்போது 4 லோடுகளாக வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு கிலோ பழம் ₹20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறுகையில், வேலூர் மார்க்கெட்டுக்கு, கேரளாவில் இருந்து அதிகளவில் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. வாரத்துக்கு 2 லோடு மட்டுமே அன்னாசி பழம் வரும். தற்போது அங்கு விளைச்சல் அமோகமாக இருப்பதால் 4 முதல் 5 லோடு வரை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் விலையும் ₹20 முதல் ₹25 வரை விற்பனை செய்யப்படுகுிறது. இதனை சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்கள் இந்த விலை நீடிக்கும்’ என்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி