வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

சென்னை: வேலூர் மாவட்டம் நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் நாகநதி கிராமத்தில் நேற்று 23.02.2024 நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்த அரியூர் மதுரா திருமலைக்கோடியைச் சேர்ந்த ராம்கி (வயது 24) என்பவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Related posts

திருவொற்றியூர் முன்னாள் எம்எல்ஏ டி.கே.பழனிச்சாமி இல்ல திருமண விழா: கனிமொழி எம்பி நடத்தி வைக்கிறார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை இந்த முறை மாற்றுவேன்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நம்பிக்கை

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு