வேலூர் பீஞ்சமந்தையில் ரூ.15.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலை திறப்பு: அமைச்சர்களுக்கு மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்களுக்கு மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர் முத்துக்குமரன் மலையடிவாரத்தில் இருந்து தீஞ்சமந்தை மலைக்கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். சாலை வசதி என்பது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வந்தது. இதனையேற்று சுமார் 15 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.55 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவுபெற்றது.

இதையடுத்து மலைவாழ்மக்கள் பயன்பாட்டிற்காக தார்சாலையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மதிவேந்தன் மற்றும் சக்கரபாணி ஆகியோரை 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த மலைவாழ் கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி