வேளாங்கண்ணியில் 29ல் கொடியேற்றம்; நாகை, கீழ்வேளூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 28ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பேராலய திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு விழா வரும் 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை பணிகள் நடந்து வருகிறது. வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துகழக குடந்தை கோட்ட நிர்வாக அலுவலர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும், அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் தென்னக ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே சார்பில் சென்னை, திருவனந்தபுரம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளுர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜி.எஸ்.டி. பற்றி கேள்வியெழுப்பிய சீனிவாசனை, ஆணவப் போக்குடன் நிர்மலா சீதாராமன் அவமதிப்பு: ராகுல் காந்தி கண்டனம்!

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்படும்: நிர்வாகம் தகவல்

அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்