வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை, தஞ்சை, கும்பகோணம், பூண்டி மாதாகோயிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் மற்ற ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் வேளாங்கண்ணியிலிருந்து திரும்ப செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Related posts

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே

ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை