வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தபோது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே சுமார் 50 அடி பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் 8 பேர் சிக்கிய நிலையில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால், 2 பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பங்க் ஊழியர் நரேஷின் உடல் மீட்கப்பட்டது. மேலும், பள்ளத்தில் சிக்கியுள்ள மற்றொருவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பவம் இடத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; சென்னை வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பள்ளத்தில் சிக்கிய 5 பேரில் ஏற்கனவே 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் நரேஷ் என்பவர் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. 50 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலன் என்பவர் உடல் எங்கு உள்ளது என்று தெரியவந்துள்ளது. தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 3 மணி நேரத்தில் ஜெயசீலன் உடல் மீட்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது