டி.பி.சத்திரம் பகுதியில் வாகன சோதனை; முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவின்படி, உதவி ஆணையர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையில், டி.பி.சத்திரம் மதீனா பள்ளிவாசல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது பதற்றத்துடன் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களது கையில் பெரிய பை வைத்திருந்தனர்.

இதையடுத்து அந்த பையை சோதனை செய்தபோது ஐம்பொன்னால் ஆன முருகர் சிலை, ஒரு அடி உயரம் கொண்ட வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளை வைத்திருந்தார்.இதையடுத்து அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இர்ஷித் முகமத் (48), கே.கே நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), டிபி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் எபினேசர் (30) என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை அனைத்தும் 150 ஆண்டுகளுக்கு மேலானது என்பதும் தெரியவந்துள்ளது.

Related posts

நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது!

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!

பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!