வீரமகாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

 

கீழ்வேளூர், ஏப்.29: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் வீரமகாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை சித்திவிநாயகர், வீரமகாகாளியம்மன், மஹா மாரியம்மன் காத்தவராயன், வீரன், பெரியநாயகியம்மன் அம்மனுக்கு கலச பூஜை மற்றம் கலச அபிஷேகத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இரவு பூச்சொரிதல் நடைபெற்று அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இன்று காலை அக்கினி கப்பரையும், இரவு விடையாற்றியும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

 

Related posts

விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசு பதுக்கல்: 2 பேர் கைது

விருதுநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்