விசிகவில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு: திருமாவளவன் பேச்சு

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் திலீபனின் 37 வது நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது: தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. மக்களுக்கான போராட்ட களம் என்பது வேறு. சீட்டுக்காக ஆசைப்பட்டு முடிவெடுப்பவன் திருமாவளவன் அல்ல. எல்லோரும் நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடிய அளவிற்கு விசிக இன்றைக்கு வளர்ந்து இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை அனைவருக்கும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. ரவிக்குமாரோ, அர்ஜுனாவோ கருத்து தெரிவித்தால் ஏன் அவ்வாறு தெரிவித்தீர்கள் என்று அவர்களிடம் கேட்பேன். விசிகவை பொறுத்தவரை திருமாவளவன் என்ன பேசுகிேறனோ அதுதான் நிலைப்பாடு. மாற்றுக் கருத்துகள் ஒன்றும் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, ஆதவ்அர்ஜுன் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது