வேப்பூரில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

வேப்பூர் : வேப்பூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு சர்வீஸ் சாலை அருகே வசித்து வருபவர் பர்ஜில்லா(60). இவர் வேப்பூரில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பர்ஜில்லாவிற்கு உடல் நிலை பாதிப்பால் கடந்த 21ம் தேதி தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

இதையடுத்து நேற்று காலை 8.30 மணியளவில் பர்ஜில்லா மனைவி ரிகானா வேப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்றபோது, சுவரோரம் உள்ள கதவின் பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரிகானா அறையினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்