வாட் வரி உயர்வால் பஞ்சாபில் பெட்ரோல் விலை 92 காசு உயர்வு

சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியதால் அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 88 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹98.95 ஆகவும் டீசல் ₹89.25 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மி அரசு பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 90 காசுகள் செஸ் வரி உயர்த்திய நிலையில், தற்போது வாட் வரியை உயர்த்தி இருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை

திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு