பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, டிஜிட்டல் கிராப் சர்வே பணி சுமையை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 2 மாவட்ட தலைவர்கள் தியாகராஜன் மற்றும் நவீன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு, அரசின் டிஜிட்டல் முறை நில அளவீடு கண்டித்தும், பணி சுமையை கண்டித்தும், டிஜிட்டல் கிராப்ட் சர்வே பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும், பிற மாநிலத்தை போல் டிஜிட்டல் சர்வேயர் என்று கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை பண்பாடுகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை