பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வு உழியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக அமல்படுத்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி ரவிக்குமார், ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் அருணாச்சலம், வெங்கடேசன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி குணசேகரன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி வாசுதேவன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் கணபதி பேசினார். முடிவில், சங்கத்தின் மாநில பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது