விதவிதமான நவராத்திரிகள்

* பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என பலவகைப்பட்ட நவராத்திரிகள் உள்ளன.
*நவராத்திரி விழாவை இந்திரன் அனுஷ்டித்து விருத்திராசுரனை அழித்தான் என்கிறது புராணம்.
* பங்குனி அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசியில் வரும் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மஹா வாராஹி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என 4 நவராத்திரிகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
* காளியை மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடும் மேற்குவங்கத்தினர் சக்தி வணக்கக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
* கொல்லூர் செல்லும் வழியில் கட்டீல் வனதுர்க்கை திருக்கோயில் இருக்கிறது. இவர் மிகவும் உக்கிரமானவர். இத்திருகோயிலில் அம்பிகையின் வெப்பத்தை தணிக்க நிமிஷத்துக்கு நிமிஷம் இளநீர் அபிஷேகம் செய்வர்.
* கேரளாவில் செடிகள் புதராக மண்டியிருக்கும் பனச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் பள்ளத்தையே சரஸ்வதி தேவியாய் வழிபடுகிறார்கள்.
* உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாளும் சேலை உடுத்தி சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
* கடலூரில் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சமயத்தில் மட்டும் திறக்கப்படும் வாசல் ஒன்று உள்ளது. அதற்கு நவராத்திரி வாசல் எனப்பெயர்.
* கோவை சிங்காநல்லூர் செல்ல பாண்டியம்மன் கோவிலில் நவராத்திரிக்கு கொலு வைக்க அம்மன் உத்தரவு கேட்பார்கள். உத்தரவு கிடைத்தால்தான் கொலு வைப்பார்கள். இல்லையெனில் அந்த ஆண்டு கொலு வைப்பதில்லை.
* திருக்கண்டியூர் திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய 3 தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகளை சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என வணங்கப்படுகின்றனர். சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெற்றவர்கள் பிரம்மா, வால்மீகி, வியாசர், காளிதாசன், யக்ஞவல்கியர், ஆதிசங்கரர், கம்பர், விஸ்வாமித்ரர், மிகிரர், குமரகுருபரர், ஒட்டக்கூத்தர் மற்றும் பல ஞானிகள்.

– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Related posts

நவராத்திரி நாயகிகள்

நவராத்திரி கொலுவின் மகிமை!

வெளிநாட்டிற்கு பறக்கும் மயிலாப்பூர் கொலு பொம்மைகள்!