லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 3 ஆண்டு சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர் கடந்த 2008ல் கோழிப்பண்ணை அமைக்க வங்கி கடன் பெற, வேலங்குடி குரூப் விஏஓ காந்தியிடம் அடங்கல், பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவற்றை வழங்க செந்தில்குமாரிடம் இருந்து ரூ.500 லஞ்சம் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ காந்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி விசாரித்து விஏஓ காந்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு