வந்தவாசி அருகே கனமழை காரணமாக நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது

* கால்வாய் அடைப்பை ஜேசிபி மூலம் அகற்றினர்

* 100 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி சேதம்

வந்தவாசி : வந்தவாசி அருகே கனமழை காரணமாக நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் கால்வாய் அடைப்பை ஜேசிபி மூலம் அகற்றினர்.
வந்தவாசி பகுதியில் நேற்று முன்தினம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. தெள்ளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் திடீரென தண்ணீர் புகுந்தன.

இப்பகுதியில் செல்லும் மழை நீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் நரிக்குறவர் தண்ணீர் தேங்கும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பொன்னுசாமி, தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் எல் சீனிவாசன் ஆகியோர் நேற்று விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதை மண்ணை அகற்றி மழை நீர் வெளியேற வழிவகை செய்தனர்.

அதேபோல் தொடர் மழை காரணமாக ஏரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லோகபதி ஓட்டு வீடு இடிந்து விழுந்தது சேதம் ஆனது. அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் குடிசை வீடு இடித்து விழுந்தன.

கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் சம்பத் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு இடிந்து சேதமானது. மூடூர் கிராமத்தில் கோழிப்பண்ணை மழைநீர் புகுந்ததால் 200 கோழிகள் பலியானது. அங்கு விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி சேதமானது.

Related posts

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல்

நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!