வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

*உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு

திருவாரூர் : நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மனநல காப்பகத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். பின்னர் விரைந்து சிகிச்சை அளித்து குடும்பத்தினருடன் சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், வண்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மனநல காப்பகத்திற்கு நேற்று திடீரென வந்த மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, காப்பகத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் மூன்று வேளையும் மனநலகாப்பகத்தில் வழங்கப்படும் உணவுகளை மாதிரி எடுத்து வைக்க வேண்டும் எனவும், மனநலகாப்பகத்தினை சுகாதாரத்துடனும், உள்ளுரையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைந்து குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் புவனா, அரசு மனநலத்திட்ட மருத்துவர் சக்திபிரகாஷ், நன்னிலம் வட்டாட்சியர் குருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு