வால்பாறையில் யை பிரிந்த பெண் குட்டி யானை மீட்பு

வால்பாறை: வால்பாறையில் தாயை பிரிந்த பிறந்து 4 மாதமே ஆன பெண் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீண்டும் தாயுடன் சேர்த்தனர். வை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் 2 டிவிஷன் பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வால்பாறை- சாலக்குடி சாலையில் பிறந்து 4 மாதமே ஆன பெண் குட்டி யானை சுற்றித்திரிந்தது. அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் குட்டியானை வந்தது. தைப்பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் குட்டியானை உயிர்தப்பியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் குட்டி யானைக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கண்காணித்தனர். இதற்கிடையே, வனத்துறையினர் டிரோன் மூலம் தாய் யானையை கண்காணித்தனர். இதில் சிறுவனம் பகுதியில் தாய் யானை மேய்ந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், பெண் குட்டி யானையை மினி லாரியில் ஏற்றி சிறுவனம் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர், லாரியில் இருந்து குட்டியானையை இறக்கிய வனத்துறையினர், அதற்கு தண்ணீர், உணவு கொடுத்து, தாய் யானை இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு சென்றனர். தாய் யானையை பார்த்த உடன் குட்டியானை ஓடி சென்று மகிழ்ச்சியுடன் சேர்ந்தது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு