வால்பாறையில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

வால்பாறை: வால்பாறை காமராஜ் நகர் தீயணைப்பு நிலையம் பின்புறம் சிறுத்தைக்குட்டி இறந்து கிடப்பதாக வால்பாறை வனத்துறைக்கு கிடத்த தகவல் அடிப்படையில், வனத்துறை ஊழியர்கள் உடலை கைப்பற்றி, ரொட்டிக்கடை வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் (பொள்ளாச்சி) துணை இயக்குனர் உத்தரவுபடி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், வனக் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் உடற்கூராய்வு செய்தனர்.

இறந்தது ஆண் சிறுத்தை குட்டி என்றும், சுமார் 4 மாத வயதுடையது தெரியவந்தது. இந்நிலையில் உடற்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்விற்கு பின் இறப்பின் விவரம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆய்வின்போது வனவர் கணேஷ், ஆர்வலர் கணேஷ் ரகுநாத் உள்ளிட்ட பலர் இருந்தனர். பரிசோதனை முடிந்து பிறகு உடல் எரியூட்டப்பட்டது.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு