வள்ளலார் சத்திய ஞான சபையில் 153வது தைப்பூச பெருவிழா : மகா மந்திரம் முழங்கி ஜோதி தரிசனத்தை கண்ட பக்தர்கள்!!

கடலூர் : வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராம லிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகிற வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 153வது ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சத்திய ஞான சபையில் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்ட போது, அந்த கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. காலை 6 மணி ஜோதி தரிசனத்தை தொடர்ந்து 5 வேளைகளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

1200 போலீசார் பாதுகாப்பு

ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக விழுப்புரம் டிஜஜி திஷா மித்தல் மேற்பார்வையில் 17 இன்ஸ் பெக்டர்கள். 1200க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பல்வேறு பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் 10 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்