வலங்கைமான் பகுதியில் 3 ஆண்டாக கட்டிடம் பழுதானதால் இயங்காத விஏஓ அலுவலகம் நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழுவில் வலியுறுத்தல்

 

வலங்கைமான், நவ. 4: ரேஷன் கடை மற்றும் வி.ஏ.ஓ அலுவலக கட்டிடங்கள் மூன்று ஆண்டுகாலமாக பழுது காரணமாக இயங்கவில்லை என வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கோரிக்கை வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் சங்கர் பேசுகையில், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சி பணிகள் செய்ய ரூ.6.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உறுப்பினர்கள் தங்களது வளர்ச்சி பணிகள் குறித்த விபரங்களை எழுதி தரலாம் எனப் பேசினார்

திமுக உறுப்பினர் தாமரை செல்வன் பேசுகையில் முனியூரில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ள கடந்த 3 ஆண்டுகாலமாக அந்த கட்டிடத்தில் பணிகள் எதுவும் நடக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க கிராம மக்கள் ஏரி வேலூர் கிராமத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைகட்டிட பழுது காரணமாக இயங்காமல் உள்ளது. எனவே பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்