வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு: 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறகப்பட்டு இருப்பதை அடுத்து 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து 71அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 70 அடிக்கு நீர் நிறைந்துள்ளது. இதையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட பானத்திற்காக இன்று வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் 7 சிறிய மதகுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வருகின்ற 5ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து 619மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மதுரை மாவட்ட பாசனத்திற்கு வருகின்ற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து