விடுமுறை நாளில் மூடிக்கிடக்கும் நெல்லியாம்பதி ஆரஞ்சு பண்ணை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாராவை அடுத்து நெல்லியாம்பதி மலைகிராமம் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்ற சிறப்புப்பெயரில் விளங்குகிற நெல்லியாம்பதி மலைகளின் இயற்கைக்காட்சிகளை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நெல்லியாம்பதிக்கு செல்கிற வழித்தடத்தில் போத்துண்டி அணை, மற்றும் பூங்கா அமைந்துள்ளன. இவற்றை சுற்றிப்பார்த்த பயணிகள் நெல்லியாம்பதிக்கு செல்கிற வழித்தடத்தில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயில் அருகிலுள்ள காட்சி முனை, மலை அருவிகள், சாலைகளை கடந்து செல்கின்ற வனவிலங்குகள் ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர். நெல்லியாம்பதியில் போத்துப்பாறை, கைக்காட்டி, தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள், குறியார்குற்றி, காரப்பாறை, பரம்பிக்குளம் காட்சிமுனைகளை ரசித்துவாறு உள்ளனர். இந்நிலையில் நெல்லியாம்பதி கைக்காட்டி அருகே நெல்லியாம்பதி ஆரஞ்சு பாம் உள்ளது. இங்கு வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அடைத்து கிடப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

இவ்விடத்தில் ஸ்குவாஸ், ஜாம், ஜெல்லி, ஆரஞ்சு, வண்ணமலர் பூந்தொட்டிகள் ஆகியவை விற்பனையும் உள்ளது. வாரநாட்களில் திங்கள் முதல் சனி வரை நாட்களில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும், மதியம் ஒரு மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் ஆரஞ்சுபாம் திறந்து செயல்படுகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக வருகையால் விற்பனையும் அமோகமாக நடக்கின்றன. இந்த ஆரஞ்சு பண்ணையில் 157 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட எழுத்தர், காசாளர் தேவையுள்ள நிலையில் 4 அலுவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் என கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி