அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடத்திற்கு 156 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் அரசின் பல்வேறு துறைகளில் 156 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரையிலான காலத்தில் சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் உதவி சிறை அலுவலர் பதவிக்கு 44 பேரும், வேளாண் பொறியியல் துறையின் கீழ் உதவி பொறியாளர் பதவிக்கு 65 பேரும், நூலகத்துறையின் கீழ் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் மற்றும் தகவல் அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 4 பேர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மொத்தம் 156 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்