v

‘‘வாங்குற சம்திங் சரியா பங்கு ேபாகலைன்னுதான் சார்பதிவு ஆபீசர கூட இருந்தே சிக்க வச்சிட்டதா குரல் ஒலிக்குதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை, கிரிவலம்னு பதிவு ஆபிசு நெருப்பு அணையாம இருக்குதாம்.. மாதந்தோறும், வாரந்தோறும்னு ஏதாவது நடந்துடுதாம்.. இந்த மாசம் வெயிலூர் மாவட்டம் குடியேற்றம் பதிவு ஆபிசுல பணம் சிக்கியிருக்குது.. குடியேற்றத்துல சார் பதிவு ஆபீசர் ஒருத்தரு பல சி சொத்து சேர்த்ததாகவும், பதிவுக்கு சம்திங் வாங்குறதாகவும் விஜிலென்சுக்கு புகார் போயிருக்குது.. இதனால சில நாளைக்கு முன்னாடி திடீர்னு விஜிலென்ஸ் ரெய்டுக்கு போனாங்க.. போன இடத்துல மேஜை பெட்டி, ஆவணங்கள் ைவப்பு அறைன்னு 77 கே பறிமுதல் செஞ்சிருக்காங்க.. வாங்குற சம்திங்ல சரியா பங்கு போகலையாம்.. இதனாலத்தான் அவரை கூட இருந்தே சிக்க வெச்சிட்டாங்கன்னு, பதிவு ஆபிஸ்ல இருந்து குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது.. பதிவு ஆபீஸ்ல தினமும் ரெய்டு நடத்துனா கூட, பணம் சிக்கிக்கிட்டே இருக்கும்போலயேன்னு ஜனங்க திட்டி தீர்க்குறாங்க.. வெயிலூர் மட்டுமில்லாம 4 மாவட்டம் பதிவு ஆபீஸ் மேட்டர் தான் இப்போ பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்களை நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிப்பதால் விரக்தியில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் நடத்தும் கூட்டங்களில் நகர பகுதியில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்பதை தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றாங்களாம்… இதனால் விரக்தியடைந்த மணியானவர், தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மூலம் ரகசிய விசாரணை நடத்தியிருக்காரு.. இதில் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் சேர்ந்த மாஜி அமைச்சர், இலை கட்சி ஆட்சி காலத்தில் பதவியில் இருந்தபோது கட்சி நிர்வாகிகளுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உதவிகள் செய்துள்ளாராம்… தற்போது சேலத்துக்காரர் அணியில் இணைந்தவுடன் அவரை வீடு தேடி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வர்றாங்களாம்.. ஆனால், மணியானவர் அமைச்சர் பதவி வகித்த காலத்தில் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, எந்தவித உதவிகளும் செய்ய வில்லையாம்.. தனது ஆதரவாளர்களை மட்டும் கவனித்தாராம்.. நிர்வாகிகளின் பேச்சை கேட்காமல் தனது ஆதரவாளர்களின் பேச்சை மட்டும்தான் கேட்டாராம்.. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் மணியானவரை பழிவாங்கும் படலத்தில் நகர நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கிறதா தகவல் வருது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் நிர்வாகிகளை தக்க வைப்பதோடு அவர்களின் வாரிசுகளை தக்க வைப்பதுதான் பெரும்பாடாக இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இப்போது நிர்வாகிகளை தக்க வைப்பதை விட, அவங்களோட வாரிசுகளை தக்கவைப்பதுதான் பெரும்பாடா மாறியிருக்காம்.. இதை மாஜி மினிஸ்டருங்க பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் வெளிச்சம் போட்டு காட்டிக்கிட்டு இருக்காங்களாம்.. அதுவும் கட்சியின் ஜெனரல் செகரட்டரியின் சொந்த ஊரில் நடக்கும் கூட்டங்களிலேயே, இதை முக்கியமாக பேசுறாங்களாம்.. நம்ம கட்சியில மூன்றெழுத்து தலைவரு, மம்மி காலம் தொட்டு மெம்பரா இருக்கிறவங்க எல்லாரும், அப்படியே இருக்கீங்க.. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் யூத்தாக இருக்கும் அவர்களது வாரிசுகள், மாற்றுக்கட்சிகளில் அதிகமாக சேர்ந்துகிட்டு இருக்காங்க.. சமீபத்திய நிலவரப்படி, பல வருஷமாக நம்ம கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள், குறிப்பிட்ட சில கட்சிகளில் அதிகளவில் சேர்ந்து வருவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. இதை நீங்கள்தான் தடுத்து நிறுத்தணும். உங்கள் வாரிசுகளுக்கு நம்ம கட்சியிலேயே, நல்ல பொறுப்புகளோடு பிரைட்டான எதிர்காலம் இருக்கு என்பதையும், நீங்கள்தான் எடுத்துக்கூறணும்.. இதை நீங்கள் எல்லாம் ஒரு கடமையாகவே செய்யணும்.. அதேபோல் மாற்றுக்கட்சிகளுக்கு போனவங்களை, நம்ம கட்சியில் கொண்டு வருவதற்கும் ட்ரை பண்ண வேண்டும் என்பது தொடர் வேண்டுகோளாக இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சருங்க ஒத்துழைப்போடு இருந்த இடமே தெரியாம போன பல கோடி மதிப்பு ஊருணி மற்றும் நிலத்தை மீட்க ஊராட்சி தரப்பு களம் இறங்கியிருக்கிறதா பேசுறாங்களே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பட்டாசு நகரில் கடந்த இலைக்கட்சியின் ஆட்சி காலத்தில் ஏராளமான நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம்.. இவற்றை கண்டுபிடிச்சு மீட்பதே அதிகாரிகளுக்கு பெரும் பணியாகி விட்டதாம்… குறிப்பாக குளம்னு முடியும் ஊராட்சியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஊருணி மற்றும் நீர்வரத்து ஓடையை இலைக்கட்சியின் மாஜி மந்திரிகளான ஷாக்கடிக்கும் துறையை கவனித்தவர், உளறல்காரர் மற்றும் தூங்கா நகரத்தை சேர்ந்த ஒருவரின் ஆதரவோடு, அந்த பகுதியை சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் டன் கணக்கில் மண்ணை கொட்டி ஊருணி இருந்த இடமே தெரியாமல் செஞ்சிட்டாராம்.. தற்போது மீண்டும் ஊருணியை மீட்க ஊராட்சி தரப்பு முயன்றால், மாஜிக்களுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் சிலர் தலையிட்டு தடுத்து நிறுத்துவதாக புகார் கிளம்பியிருக்கு… எனவே, பல கோடி மதிப்புள்ள ஊருணி மற்றும் நிலத்தை எப்படியாவது மீட்க வேண்டும்னு ஊராட்சித் தரப்பு களம் இறங்கியுள்ளதாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது