உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் கட்டுமான பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் 13 பேர் டிராக்டர் டிராலியில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த டிராக்டர் டிராலி மிர்சாபூர்-வாரணாசி எல்லையில் உள்ள கச்சவான் மற்றும் மிர்சாமுராத் பகுதிக்கு இடையே ஜிடி சாலையில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் டிராலியில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!