உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாஜக நிர்வாகியான பிரிஜ்பூஷண், இந்திய மல்யுத்த சங்க முன்னாள் தலைவரக பதவி வகித்தார். பதவிக்காலத்தின் போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷண் மீடு குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரிஜ் பூஷண் மகன் கரண், பா.ஜ.க. சார்பில் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!