உத்தரகாண்ட் தேர்வாணைய தலைவர் திடீர் ராஜினாமா

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில அரசு தேர்வாணைய தலைவர் ராகேஷ் குமார் 18 மாதங்களில் ராஜினாமா செய்துள்ளார். பாஜ ஆட்சி நடந்து வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராகேஷ் குமாரை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் மாநில தேர்வாணைய தலைவராக அரசு நியமித்தது. 6 ஆண்டுகள் இவர் பதவியில் இருப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் ராகேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக ராகேஷ் தெரிவித்தார். ஆனால், அவரது பதவி காலத்தில் போட்டி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வெளியானதால் 3 முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்