உத்திரமேரூர் நூக்காலம்மன் கோயிலில் ஆவணி பவுர்ணமி பால்குட திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் நூக்காலம்மன் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 150வது பால்குட திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். உத்திரமேரூர் – எண்டத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நூக்காலம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, 150வது பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, காப்பு கட்டி விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்து அடைந்தனர். பின்னர், பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனுக்கு தங்களது கரங்களால் பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து அம்மன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்