உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தனியார் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு..!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தனியார் பேருந்தும் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் கோட்வாலி பகுதியில் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இரட்டை அடுக்கு ஸ்லீப்பர் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

தனியார் பேருந்து முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது இன்று அதிகாலை 05.15 மணியளவில் பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற பேருந்து, பெஹாடா முஜாவரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட விமான ஓடுபாதையில் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெஹாடா முஜாவாரா காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிஓ பங்கர்மாவ் அரவிந்த் சௌராசியா தலைமையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், முதற்கட்ட விசாரணையில் பஸ் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related posts

அரசியல் சாசன படுகொலை தினத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!!

இந்தியா-இலங்கை முதல் டி.20 போட்டியில் நாளை மோதல்

இன்று இரவு கோலாகல தொடக்க விழா; ஒலிம்பிக் பதக்க வேட்டை நாளை ஆரம்பம்.! விழாக்கோலம் பூண்டது பாரிஸ்