திருவள்ளூர் திருமாலியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வார உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, புங்கத்தூர் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திருமாலியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வார உற்சவ விழா நடைபெற்றது. இதில் கிராம தேவதையான ஸ்ரீ திருமாலி அம்மன் மற்றும் ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு ஆடி மாத சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மன் வீதி உலாவும், கூழ் வார்த்தல் மற்றும் கும்ப வைபவமும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு துலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு விசேஷ பூஜையும், 8 மணிக்கு ஏரிக்கரை வேப்பமரத்து அடியில் இருந்து அம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், 11 மணிக்கு தீபாராதனையும், கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து 6 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் வாணவேடிக்கை மற்றும் பக்கவாத்தியங்களுடன் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. பிறகு 9 மணியளவில் கும்பம் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருமாலியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய திருப்பணி அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related posts

ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!