உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

உதகை: உதகை படகு இல்லத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மோட்டார், துடுப்பு படகு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நூற்றுக்கணக்கான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50 மோட்டார் படகுகள், 20-க்கும் மேற்பட்ட துடுப்பு படகுகள் உள்ளன; படகுகளை 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். ஸ்கேனர் மூலம் வருகை பதிவை காலை 8 மணிக்கு பதிவு செய்ய படகு இல்ல நிர்வாகம் உத்தரவிட்டது. ஸ்கேனர் மூலம் வருகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த படகு ஓட்டுநர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பார்சன்ஸ்வேலி சாலையில் அபாயகர மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு