அமெரிக்க கருவூலத்துறை ஆலோசகர்கள் மாமன்ற கூட்ட நடவடிக்கையை பார்வையிட்டு ஆலோசனை: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: அமெரிக்காவின் கருவூலத்துறையை சார்ந்த அரசு கடன் மற்றும் உட்கட்மைப்பு பிரிவின் ஆலோசகர்கள் ஆதம் வொய்ட்மேன், மரியா யூஜினியா மேட்சன்ஸ் ஆகியோர் மாமன்ற கூட்ட நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு கலந்தாலோசனை செய்தனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா நாட்டின் கருவூலத்துறையை சார்ந்த அரசு கடன் மற்றும் உட்கட்மைப்பு பிரிவின் ஆலோசகர்கள் ஆதம் வொய்ட்மேன் மற்றும் மரியா யூஜினியா மேட்சன்ஸ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு கலந்தாலோசனை மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்ட நடவடிக்கைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்