அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்பிக்கள் போர்க்கொடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்குகிறார். ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் பேசும்போது அவர் சில விஷயங்களை கவனக்குறைவாக கூறி விடுகிறார். இதனால் பைடனுக்கு பதில் ஜனநாயக கட்சி சார்பில் புதிய நபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

கடந்த மாதம் அட்லாண்டாவில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப்புடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது பல்வேறு விஷயங்களில் டிரம்ப் தனது கருத்தை ஆணித்தரமாக அடித்து கூறினார். ஆனால் ஜோ பைடன் திணறினார். இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜெர்ரி நட்லர்,மார்க் டக்கானோ,ஜோ மாரேல்லே, டெட் லியூ மற்றும் ஆதம் ஸ்மித் ஆகிய 5 எம்பிக்கள் அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே,5 எம்பிக்கள் பைடனுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு