யுஎஸ் ஓபன் டென்னிஸ் சபலென்கா, கோகோ காப் பைனலுக்கு தகுதி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில், 6ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 19 வயதான கோகோ காப், 10ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் 27 வயதான கரோலினா முச்சோவா மோதினர். இதில் முதல் செட்டை 6-4 என கோகோ காப் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 7-5 என தன்வசப்படுத்தினார். முடிவில் 6-4, 7-5 என கோகோ காப் வென்று முதன்முறையாக யுஎஸ் ஓபனில் இறுதிபோட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் 25 வயதான அரினா சபலென்கா, 17வது ரேங்கில் உள்ள அமெரிக்காவின் 28 வயதான மேடிசன் கீஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை அதிடியாக ஆடிய மேடிசன் கீஸ், சபலென்காவை ஒரு பாயின்ட் கூட எடுக்கவிடாமல் 6-0 என கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார். 2வது செட் டைப்ரேக்கர் வரை சென்ற நிலையில், 7-6 என சபலென்கா தன்வசப்படுத்தினார். 3வது செட்டை 7-6 என சபலென்கா கைப்பற்றி இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

 

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்