உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்து விடுக: வைகோ

சென்னை: உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்து விட வைகோ வலியுறுத்தியுள்ளார். உசிலம்பட்டி, திருமங்கலத்தில் போதிய மழை இல்லாததால், மக்கள் விவாயத்திற்கும் குடிநீருக்கும் அவதிப்படுகிறார்கள். அதனால் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான காஜ்வாய், 58 கிராம கால்வாய் நீரால் கண்மாய்கள் நிரம்பும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200-க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். இதன் மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கும் என வைகோ தெரிவித்துள்ளர்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!