அமெரிக்கா விசா 10 லட்சத்தை எட்டியது

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான குடியேற்றம் இல்லாத விசா 10 லட்சத்தை எட்டியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான குடியேற்றம் அல்லாத 10 லட்சம் விசா என்ற இலக்கை இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எட்டியுள்ளது. அதன்படி 10 லட்சமாவது விசாவை டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரஞ்சு சிங் மற்றும் அவரது கணவர் புனித் தர்கானுக்கு வழங்கப்பட்டது.

இதை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் செட்டி வழங்கினார். இவர்கள் அடுத்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா செல்லவுள்ளனர். விசா பெற்றது குறித்து தம்பதியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எரிக் கார் செட்டி கூறியதாவது, “இந்தியாவுடனான அமெரிக்க மக்களின் உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு உலகின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்று” என்று தெரிவித்தார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்