கலிபோர்னியா: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானத்தில் 3 பேர் பயணம் செய்தனர். பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே மீட்பு படையினர், தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.