யுஎஸ் ஓபன் டென்னிஸ் கோப்பையை முத்தமிட்ட சாம்பியன் சபலென்கா

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி மற்றும் 4வது கிராண்ட ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா(30வயது, 6வது ரேங்க்), பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா( 26வயது, 2வது ரேங்க்) ஆகியோர் மோதினர். தொடர்ந்து 2வது முறையாக யுஎஸ் ஓபன் இறுதி ஆட்டத்தில் விளையாடிய சபலென்காவின் கைதான் ஒங்கியிருந்தது.

முதல் முறையாக யுஎஸ் பைனலில் விளையாடிய பெகுலாவும் கடுமையாக போராடிார். அதனால் ஒவ்வொரு செட்டும் டை பிரேக்கர் அருகே சென்றது. ஒவ்வொரு புள்ளிகளை குவிக்கவும் சபலென்கா போராட வேண்டி இருந்தது. அதனால் ஒரு மணி 53நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் 7-5, 7-5 என நேர் செட்களில் சபலென்கா வெற்றிப் பெற்றார். அதன் மூலம் சபலென்கா முதல் முறையாக யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இது இவருக்கு 3வது கிராண்ட் ஸ்லாம் கோப்பையாகும். இவர் ஏற்கனவே 2023, 2024 ஆண்டுகளில் ஆஸி ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு