அமெரிக்க எச்1பி விசா வைத்திருக்கும் 10,000 பேரின் வேலைக்கு அனுமதி: கனடா அறிவிப்பு

டொராண்டோ: அமெரிக்க எச்ஒன்பி விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேருக்கு கனடா நாட்டில் வேலைக்கு அனுமதிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ப்ராசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க எச்1பி விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேர் கனடாவில் பணிபுரிவதற்கு அனுமதிக்கும் வகையில் பணி அனுமதியை ஜூலை 16ம் தேதி கனடா அரசு உருவாக்கும். இந்த புதிய முடிவின் கீழ் எச்1பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கி பணியாற்ற முடியும். அவர்கள் கனடாவில் எங்கு வேண்டுமானாலும் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி