அமெரிக்கா – தென்கொரியா படைகள் கூட்டு ராணுவ பயிற்சி: வடகொரியாவின் ஏவுகணை சோதனை மிரட்டலுக்கு பதிலடி

தென்கொரியா: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாவின் தேபேக் என்ற மலைப்பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் அமெரிக்க படைவீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானம் மூலம் இலக்கை தாக்கி அடித்தல் விமானங்களை குறிவைத்து தாக்குதல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டனர். நவீன ரக துப்பாக்கிகளும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்