அமெரிக்க வௌியுறவு அமைச்சர் பிளிங்கன் உக்ரைன் பயணம்: கூடுதல் ராணுவ உதவிகளை அறிவிக்க திட்டம்

கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. 560 நாட்களாக நீடிக்கும் போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பொருளாதார, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.இந்நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை ஆண்டனி பிளிங்கன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் ரூ.1,640 கோடி அளவிலான ராணுவ உதவிகளை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!